சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்ததும் கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, காவலர்கள் கைதை கண்டித்து அவர்களது குடும்பத்தினர், காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை சிறைபிடித்துள்ளதால் தமிழ்நாடு மீனவர்கள் கொந்தளிப்பு.

ஓரணியில் தமிழ்நாடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 1) ‘ஓரணியில் தமிழ்நாடு' என்ற திமுக உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை பூத் கமிட்டி மூலம் உறுப்பினராக்க இலக்கு. இதை 2 மாதங்களில் நிறைவு செய்திட அறிவுறுத்தல்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக இணைய இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 17ம் தேதி வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாள்.விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு.

"Zomoto, Swiggy நிறுவனங்களுக்கு உணவு கிடையாது”

Zomoto, Swiggy நிறுவனங்களுக்கு நாமக்கல் தாலுக்காவில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகளில் இருந்து இன்று முதல் உணவு வழங்கப்படாது. ஒரே மாதிரியான கமிஷன் தொகை, மறைமுக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததால் நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமல்படுத்தியுள்ளார். பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களில் பட்டியலின பிரிவினருக்கு 15%, பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5% பணியிடங்கள் ஒதுக்கீடு.

”வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது”

டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை. வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யவும் உத்தரவு. பழைய வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கவும் காவல்துறைக்கு அதிகாரம்.

40-ஐ கடந்த பலி எண்ணிக்கை

தெலங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42-ஐ கடந்துள்ளது.  தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது நேற்று நடந்த இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தட்கல் டிக்கெட்டில் புதிய நடைமுறை

ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் நடைமுறை அமலுக்கு வந்தது. IRCTC கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்கவில்லை எனில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய இனி இயலாது. டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்னர் ஆதார் இணைப்பை உறுதி செய்து கொள்ளவும்.

தீவிர பயிற்சியில் குல்தீப்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான தீவிர வலை பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.நாளை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்பு என துணை பயிற்சியாளர் டென் டோஷேட் கூறியிருந்தார்