"விரைவு ரயில்களில் இன்று முதல் 1 பைசா முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது"

ரயில் கட்டணம் உயர்வு

உலக அளவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக, இந்திய ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்திய ரயில்வே கீழ் பல ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்கி வருகின்றன. இலட்சக்கணக்கான ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர். 

ரயில் கட்டண உயர்வு என்பது, நாடு முழுவதும் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்தும் அம்சமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் விரைவு ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது. ரயில் கட்டண உயர்வு பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

பயணியர் ரயில் 

நாடு முழுவதும் 12,617 பயனியர் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் ரயில்வே கட்டண உயர்வு குறித்து பேசுகையில், மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. 

கட்டண உயர்வு விவரம் என்ன ?

கடைசியாக 2020 ஆம் ஆண்டு ரயில் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது ரயில் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 500 கிலோ மீட்டருக்கு மேலான ரயில்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

விரைவு ரயில்களில் 500 கிலோ மீட்டர் வரை எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை. அதற்கு பதிலாக 501 - 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு ஐந்து ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1501 முதல் 2500 கிலோமீட்டர் பத்து ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2500 கிலோமீட்டர் முதல் 3000 கிலோமீட்டர் வரை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்லீப்பர் கட்டணம் எவ்வளவு உயர்வு? 

ஸ்லீப்பர் முன்பதிவு வகுப்பு பெட்டியில், பயணிக்க ஒரு கிலோ மீட்டருக்கு 5 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க ஒரு கிலோமீட்டருக்கு 5 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 2 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் கட்டணம் உயருமா?

புறநகர் ரயில் டிக்கெட் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோன்று புறநகர் ரயில் சீசன் டிக்கெட்டுகளும் எந்தவி மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ரயில் டிக்கெட் எடுத்திருந்தவர்களுக்கு அதே கட்டணம் தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "தட்கல் டிக்கெட்" முன்பதிவுக்கு இனி ஆதார் இணைப்பு கட்டாயம் என உத்தரவும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.