மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு நிவாரணம்
அக்டோபரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கும், 345 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் நிவாரணம். டிட்வா புயல் காரணமாக உயி ழந்தவர்களுக்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் விரைவாக இழப்பீடு வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பாதி வழியில் நின்ற மெட்ரோ ரயில்
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி சென்ட்ரல் அருகே நின்றது. சுரங்கப்பாதையில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் தற்போது மெட்ரோ ரயில் சேவை சீரானது.
மேம்பாலத்தில் காரை நிறுத்தியுள்ள மக்கள்சென்னையில் நேற்று(டிச.01) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தண்ணீர் தேங்கும் என்ற அச்சத்தால் கார்களை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நிறுத்தியுள்ள மக்கள்; வேளச்சேரி, ராயபுரத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்
"சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்"
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; சிறப்பு புலனாய்வுக் குழு வசமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும். அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணைய விசாரணை தொடரும் வகையில், தடை உத்தரவை நீக்க வேண்டும் -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
சென்னையிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் 7 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல். சென்னை-அகமதாபாத், சென்னை- அந்தமான், சென்னை-மும்பை, சென்னை-புவனேஸ்வர் உள்ளிட்ட விமானங்கள் ரத்து. முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதி
மத்திய அரசு உத்தரவு
அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாதி செயலி இனி கட்டாயம். தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
இலங்கையில் 330 பேர் பலி
டிட்வா புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் இலங்கையில் இதுவரை 330 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் நுவெரலியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பேருந்திலேயே 3 நாட்களாக இருந்துள்ளனர். இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருந்தார். தமிழ்நாடு அரசின் பெரு முயற்சியால், சுற்றுலாப் பயணிகள் இன்று காலை சென்னை திரும்பினர்.
ஐபிஎல் மினி ஏலம்:
2026ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு. 10 |அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது. துபாயில் வரும் 16ம் தேதி மினி ஏலம் நடைபெற உள்ளது.
இந்திய வீரர் விராட் கோலி ஓபன் டாக்
“எனக்கு 37 வயது ஆவதால் உடற்தகுதியை உன்னிப்பாக கவனித்து கொள்கிறேன்.ரன்கள் குவிக்க முடியாமல் போனால் மட்டுமே அதிக நேரம் பயிற்சியில் செலவிட விரும்புவேன்.மற்றபடி போட்டிகளுக்கு மனரீதியாக தயார இருப்பதே எனக்கு முக்கியம். ராஞ்சி ஆடுகளத்தில் முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. அதன்பின் ஆடுகளம் மந்தமானதால் ஒவ்வொரு பந்தையும் கணித்து விளையாடினேன்” - கோலி