பள்ளிகளுக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும் -தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
சென்னையில் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று NDA கூட்டணி தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை மேற்கொள்ள சென்னை வருகை. அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்த பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தனது நிலைபாட்டை இன்று மாலை அறிவிக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரூ.1 லட்சத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 கூடி ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 234 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு அனுமதி
நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட பொருநை இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ. 10, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயம்
இண்டிகோ பயண வவுச்சர்கள் டிச.26 முதல் விநியோகம்!
இந்தியா முழுவதும் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு. இந்த வவுச்சர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது, அரசு விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய ரூ.5000-10,000 இழப்பீடு தொகையுடன் சேர்த்து கூடுதலாக இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொகையாகும்.
தொடங்கியது கவுண்டவுன்
ஸ்ரீஹரிகோட்டாவில் 'LVM3-M6' ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது. அமெரிக்காவின் AST SpaceMobile நிறுவனத்தின் 'BlueBird 6' செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் இந்த ராக்கெட், சரியாக நாளை (டிச.24) காலை 8:54 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா
அணுசக்தியில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கிய ஒன்றிய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பு. "அணுசக்தி துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்த வழிவகுக்கும் 'சாந்தி' மசோதாவை வரவேற்கிறோம், புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் ஒத்துழைப்பு அளிக்க - தயாராக உள்ளோம்” -அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்
கமிஷன் வாங்க அறிவுரை
10% கமிஷன் கிடைக்கவில்லை என்றால், குறைந்தது 5% கமிஷனாவது பெற முயற்சியுங்கள் என தனது கட்சி எம்.பி., எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கிய மத்திய அமைச்சரும் HAM கட்சித் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி. தான் கமிஷன் வாங்கி பலமுறை கட்சிக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து எம்.பி., எம்எல்ஏக்கள் கமிஷன் பெறுவது வழக்கமான ஒன்றுதான் என கூறியதால் சர்ச்சை.
தடையற்ற வர்த்தகம்
இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இருநாடுகளும் அறிவிப்பு. இதன்மூலம் அனைத்து இந்திய பொருட்களுக்கும், நியூஸிலாந்தின் 95% பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்.
லிபியாவுக்கு ஆயுதங்களை விற்கும் பாகிஸ்தான்
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவின் கிழக்குப் பகுதியை கட்டுப்படுத்தும் லிபிய தேசிய ராணுவத்திற்கு $4 பில்லியன் மதிப்புள்ள ராணுவ உபகரணங்களை விற்க பாகிஸ்தான் ஒப்பந்தம். ஐநாவால் அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆயுத விற்பனைத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள லிபிய தேசிய ராணுவத்திற்கு JF-17 போர் விமானங்கள், Super Mushak பயிற்சி விமானங்கள் உள்ளிட்டவைகளை விற்க பாகிஸ்தான் முடிவு.