4 பேர் உயிரிழப்பு
உத்தராகண்டில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு. காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் ராணுவம் தீவிரம்.உத்தரகாசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
எம்.பியிடம் செயின் பறிப்பு
டெல்லியில் நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயின் பறிப்பு.பைக்கில் வந்த மர்ம நபர் செயினை பறித்துத் தப்பி ஓடியதாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார்.
புதிய உச்சம்
UPI வரலாற்றில் புதிய உச்சமாக ஆக.2ல் 70.7 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய பேமண்ட் கார்பரேஷன் தகவல்.ஜூலையில் சராசரியாக தினமும் 65 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அடுத்தாண்டு தினசரி 100 கோடி பரிமாற்றங்கள் என்ற நிலை உருவாகும் என NPCI கணிப்பு.
வேலைவாய்ப்பு
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இன்று முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கனமழை
கேரளாவில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளம். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. கனமழை காரணமாக எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ரீல்ஸ் மோகம் - 3 பேர் கைது
டெல்லி: குருகிராம் அருகே ஷோபா நகர் போக்குவரத்து சிக்னலில் சாலையை மறித்து, 10 மேற்பட்ட கார்களை நிறுத்தி வைத்து இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்த 3 இளைஞர்கள் கைது. ஹிமான்ஷு (22), சாகர் (24), கவுஷல் (24) ஆகியோரிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டியில் மாற்றமில்லை!
"வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும்" -ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு.
செஸ் போட்டி ஒத்திவைப்பு
சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைப்பு. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒத்திவைப்பு. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக உள்ளனர். வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவிப்பு.
பண்ட் உதவிக்கரம்:
கர்நாடகாவில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்த ஜோதிகா என்ற மாணவிக்கு ரூ.40,000 வழங்கி உதவியுள்ளார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்.கட்டணம் செலுத்த முடியாத செய்தி பண்ட்டின் கவனத்திற்கு வரவே, தேவையான பணத்தை கல்லூரிக்கே நேரடியாக அனுப்பியுள்ளார். ஜோதிகாவும், கல்லூரி நிர்வாகமும் அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்
மீனவர்கள் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உட்பட 14 தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை