கட்சத்தீவை மீட்கக் கோரி முதலமைச்சர் தனித்தீர்மானம்

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து பேசுகையில், “தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடுகிறது. முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக மீனவர்கள் கைது உள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் |நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து வழங்க பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். மக்களின் இந்த முக்கிய பிரச்னை தொடர்பாக எங்களது ஒற்றுமையான கருத்துகளை எடுத்துரைக்க விரைவில் நேரம் ஒதுக்குக -முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பூரில் ஆணவக்கொலை

பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் தங்கையை ஆணவக்கொலை செய்த சொந்த அண்ணன். காதலியின் இறப்பில் சந்தேகம் இருந்ததால் காதலன் அளித்த புகாரில் காமநாயக்கன் பாளையம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அண்ணன் சரவணன் ஒப்புக்கொண்டுள்ளார்.

வக்பு வாரிய மசோதா

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல். அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கொறடா உத்தரவு. இச்சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு. விவாதத்தில் பங்கேற்று வலுவான எதிர்ப்பு தெரிவிக்க திட்டம்.

வக்பு சட்டதிருத்த மசோதா - காங்கிரஸ் ஆலோசனை

வக்பு சட்டதிருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை. நண்பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கலாகும் மசோதா; இன்று அனைத்து உறுப்பினர்களும் மக்களவையில் இருக்க கொறடா உத்தரவு; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே இன்று மசோதா தாக்கல்

சபரிமலையில் கோவில் நடை திறப்பு

பங்குனி உத்திரத்  திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

இன்று அமலாகிறது அமெரிக்காவின் புதிய வரிகள்

தங்கள் நாட்டு பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளுக்கு நிகராகவே, அந்தந்த நாடுகளின் பொருட்களின் மீதான வரி வசூலிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, இந்திய வேளாண் பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பதிவு

9 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 18 ஆம் தேதி விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி, மருத்துவ கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ். அவரது வளர்ப்பு நாய்களை சுனிதா வில்லியம்ஸை ஆரத்தழுவி வரவேற்ற வீடியோ வைரல்

ஐபிஎல் இன்றைய போட்டிகள்:

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. பெங்களூரு அணி இதுவரை இரண்டு வெற்றிகளையும், குஜராத் அணி ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

14 ஆண்டுகள் நிறைவு

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றது குறிப்பிடத்தக்கது.