- மாநிலங்களவைக்கு தேர்வான அதிமுக எம்.பி-க்கள் ம. தனபால், இன்பதுரை ஆகியோர் இன்று உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.
- சேலம் மேட்டூர் அணையிலிருந்து 1,00,400 கனஅடி நீர் திறப்பால் காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- ஈரோட்டில் காவிரி ஆற்று வெள்ளம் வீடுகளை சூழ்ந்த நிலையில், மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்.
- கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக உயர்வு. குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை.
- ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம். பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேச உள்ளார்.
- பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தேஜஸ்வி யாதவ்-வின் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் அறிவிப்பு.
- பீகாரில் வெளியிட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல என்றும், ஆட்சேபனைகள் இருந்தால் ஆதாரங்களுடன் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் தரப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல்.
- தெலங்கானாவில் திருமணமான 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால், வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம், 35 சவரன் நகையை திருப்பிக் கேட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டம்.
- நிலாவில் இறங்கி மாதிரிகளை கொண்டு வரும் சந்திரயான் 4 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக அமையும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை. வரும் 30-ம் தேதி GSLV F-16 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி.
- இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளதால் சர்ச்சை. தாய்லாந்து-கம்போடியா மோதலை தடுக்கும் முயற்சியின்போது, இதை குறிப்பிட்டுள்ளார்.
- 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அறிமுகமான முதல் தொடரில் அதிக சதங்கள்(4) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய கேப்டன் சுப்மன் கில்.