- ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் காணொலியில் ஆலோசனை.
- தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக காட்டுமன்னார் கோவில் பகுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வரப்போவதாக, ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார்.
- பாஜக-அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை, விசிக, சிபிஎம் கட்சிகள் நிராகரித்துள்ளன.
- அடுத்த கல்வி ஆண்டு முதல், 13 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் 488 இடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,105-க்கும், ஒரு சவரன் ரூ.72,840-க்கும் விற்பனை.
- புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி துறையில் இலக்கை எட்டுவதற்காக, என்.எல்.சி நிறுவனத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
- ஒடிசாவில் கல்லூரி உதவி பேராசிரியல் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தீக்குளித்து உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் அம்மாநிலம் முழுவதும் இன்று கயைடைப்புப் போராட்டம்.
- இறப்புப் பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து, 1.20 கோடி மரணமடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை.
- டெல்லியில் இருந்து கோவா நோக்கி சென்ற இண்டிகோ விமானம், எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
- சிரியா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், சிரிய ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது, போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ரேப்பிட் செஸ் போட்டியின் 4-வது சுற்றில், உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக, மேற்கிந்திய தீவுகள் வீரர் ஆன்ட்ரூ ரஸல் அறிவித்துள்ளார்.