- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன, அதுவும் சதிச் செயலா.? என இபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர் பாபு கேள்வி.
- தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல் நிலையங்களில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைமையகத்தில் சந்தித்து நிதி உதவி வழங்க விஜய் திட்டம் என தகவல்.
- கடலூர் செம்மங்குப்பத்தில், ரயில் விபத்து நடந்த இடத்தில், தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு. அருகில் உள்ள வீடுகளிலும் விசாரணை.
- கடலூர் ரயில் விபத்து எதிரோலியாக, அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு.
- அனைத்து ரயில்வே கேட்டுகளையும் இண்ட்டர் லாக்கிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்.
- தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.
- இந்தியாவில் செற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்க, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, 2030-ம் ஆண்டுவரை அனுமதி(லைசென்ஸ்) வழங்கியது இன்-ஸ்பேஸ் நிறுவனம்.
- மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான் நிறுவனங்களைத் தொடர்ந்து, இன்டெல் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீவிரம்.
- உலக வர்த்தகததில், 4 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மூலதன மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது Nvidia நிறுவனம். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்டை பின்னுக்கு தள்ளி, 7.3% மதிப்புடன் முதலிடம்.
- சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், வரும் 13-ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா தகவல்.
- இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடக்கம். இப்போட்டியில், இந்திய தரப்பில் பும்ராவும், இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சரும் களமிறங்குகின்றனர்.
Top 10 News Headlines: அனைத்து ரயில்வே கேட்டுகளில் சிசிடிவி, டெல்லி, உ.பி-யில் நிலநடுக்கம், இன்று 3-வது டெஸ்ட் போட்டி - 11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் | 10 Jul 2025 11:00 AM (IST)
Top 10 News Headlines Today July 10: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.
11 மணி தலைப்புச் செய்திகள்
Published at: 10 Jul 2025 11:00 AM (IST)