Top 10 News: ”இனி எல்லாமே டிஜிட்டல் தான்” ரூ.2 லட்சம் கோடி வருவாய் - டாப் 10 செய்திகள்

TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

Continues below advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை

Continues below advertisement

”AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, பெருகத்தான் செய்யும். இன்று நாம் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இனி மக்களின் எல்லா பயன்பாடும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும் -சென்னையில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைப்பு. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் நிலையில் இன்று (ஜன.9) முதல் வரவு வைக்கும் பணி தொடங்கியது.

வடசென்னை வளர்ச்சி திட்டங்கள்:

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே. என். நேரு, ”கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 கழிவு நீர் அகற்றும் நிலையம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. எந்த இடங்களில் உடனடி தேவை என்பதைக் குறிப்பிட்டால் உடனடியாக முன்னுரிமை தந்து பணிகள் முடிக்கப்படும்" என  ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தார்.

மீண்டும் 58 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் ஆபாரண தங்கத்தின் விலை 35 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது முதலமைச்சர் அதிருப்தி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அறிவிக்க முடிவு

மகா கும்பமேளா - ரூ.2 லட்சம் கோடி வருவாய்?

உத்தர பிரதேசத்தில் வரும் 13ம் தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது. இதில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் எனவும், இதனால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கடந்த வருடன் 1.2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

விண்கலன்களை இணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ

கடந்த 30ம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்ட இரண்டு செயற்கைகோள்களை, ஸ்பேஸ் டாக்கிங் முறையில் இன்று இணைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் பயங்கர காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது. 5 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் 13 பேர் பலி 

உக்ரைன், ரஷியா இடையே இன்று 1,050வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் - கனடாவின் பிரையன் யங் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய 21-12, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் கனடாவின் பிரையன் யங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து பிரனாய், சீனாவின் ஷி பெங் லீயை சந்திக்கிறார்.

Continues below advertisement