முதமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

Continues below advertisement


நல்லாட்ச்க்கான நற்சான்றிதழ் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எனவும், களத்திற்கே வராமல் அதிமுக புறமுதுகிட்டு ஓடிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம். திமுக வேட்பாளர் 1.15 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில், நாதக வேட்பாளர் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.


தமிழக மீனவர்கள் 14 பேர் கைது


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர் கைது சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



டெல்லியின் புதிய முதலமைச்சர்


டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, புதிய முதலமைச்சர தேர்வு செய்ய உள்ளது. இதற்காக இன்று எம்.எல்.ஏக்களின் ஆலோசனக் கூட்டம் கூடுகிறது. இதில் கெஜ்ர்வாலை வீழ்த்திய, பர்வேஷ் வர்மாவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கூட்ட நெரிசல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை


உத்தரப்பிரதேசம்: மஹா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பிரயாக்ராஜ், வாரணாசி மாவட்டங்களில் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப். 12ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு. (ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்)


பேப்பர் ஸ்ட்ரா உத்தரவு ரத்து


அமெரிக்காவில் பிளாஸ்டிக் STRAWகளுக்கு தடை விதித்து பேப்பர் STRAWகளுக்கு மாறுவது என்ற பைடனின் திட்டத்தை ரத்து செய்யப்போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. பேப்பர் ஸ்ட்ராவில் குடித்தால் அது அருவருப்பாக வாயில் கரைவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம். 2035ம் ஆண்டுக்குள் அமெரிக்க அரசின் துறைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் முழுவதுமாக தடை செய்வது என்ற கொள்கை முடிவை பைடன் அரசு எடுத்திருந்தது.


கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.


கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரிபியன் கடலை ஒட்டிய தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச சுனாமி தகவல் மையம்


சீனாவில் பயங்கர நிலச்சரிவு


சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 30 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேம்படுத்தப்பட்ட Exter வகை கார்களை அறிமுகம்


கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட Exter வகை கார்களை  Hyundai நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ₹7.73 லட்சத்தில் (Ex-Showroom) தொடங்குகிறது. புதியதாக சேர்க்கப்பட்ட Top-spec SX Tech CNG variant-ன் விலை ₹9.53 லட்சமாக நிர்ணயம்.


இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு, கட்டக் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.


சாம்பியன் பட்டம் வென்ற MI கேப் டவுன் அணி..!


தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் முதல்முறையாக கோப்பை வென்றது ரஷித் கான் தலைமையிலான MI கேப் டவுன் அணி..! இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை | 76 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தி அபார வெற்றி பெற்றது