தொடங்கியது சட்டப்பேரவை கூட்டம்


தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டு நாள் கூட்டத் தொடர் தொடங்கியது. முதலில் உயிரிழந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.


தனியார் பேருந்து விபத்து


சென்னையில் இருந்து கோவைக்கு 37 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து, அவிநாசி யை அடுத்து வேலாயுதம்பாளையம் பைபாஸ் அருகே லாரி மீது மோதி விபத்து. 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம். விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நடிகர் திலீபனால் சபரிமலையில் சர்ச்சை


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள நடிகர் திலீப்பின், விஐபி தரிசனத்தால், மற்ற பிற பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த விவகாரம். 4 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள உயர் நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து, காவல்துறை விரிவான விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.


ஆம்புலன்ஸை திருடிய நபரை விரட்டி பிடித்த போலீஸ்


தெலங்கானா: மருத்துவமனையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்சை திருடிய 50 வயதான நபரை 100 கி.மீ. தூரத்திற்கு விரட்டி பிடித்த போலீஸ். ஆம்புலன்சை காணாததால் ஓட்டுநர் திணற, அதில் பொருத்தப்பட்டிருந்து ஜிபிஎஸ் கருவி மூலம் அதன் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர். திருட முயற்சித்த நபர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணையில் தகவல். 


காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டு


மத்திய பிரதேச மாநிலம் மோரெனா மாவட்டத்தில் உள்ள சிறப்பு ஆயுத படைகளின் (SAF) ஆயுதக் கிடங்கில் 9 மி.மீ. துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி சுமார் 200 தோட்டாக்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறப்பு ஆயுத படைகளின் 2-வது மற்றும் 5-வது பட்டாலியனின் கம்பெனி கமாண்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


பள்ளி மாணவிகள் 3 பேர் உயிரிழப்பு


ராஜஸ்தானில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்தனர். ராஜஸ்மந்தில் உள்ள தனியார் பள்ளி சார்பில் 62 மாணவர்கள் உள்பட 70 பேர் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். டெசூரி நல் என்ற பகுதி வேகமாக சென்று கொண்டிருந்தபோது,  வளைவு ஒன்றில் திரும்ப முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 25 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ராட்டினத்தால் பறிபோன உயிர் - இழப்பீடு கொடுத்த நிறுவனம்!


அமெரிக்கா: ஆர்லாண்டோ நகரில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் கடந்த 2022ம் ஆண்டு ராட்டினம் அறுந்து விழுந்து உயிரிழந்த சிறுவன் டயர் சாம்ப்சன் குடும்பத்திற்கு, சுமார் ₹2,600 கோடி இழப்பீடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூங்காவுக்கு இடத்தை வழங்கிய ஜகான் பார்க் நிறுவனத்தின் மீது சிறுவனின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.


மாஸ்கோவில் தஞ்சமடைந்த சிரியா அதிபர்


மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்து வந்த நிலையில், சிறப்பு விமானத்தில் அவர் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.


கம்மின்ஸ் சாதனை


இந்திய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம்,  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற இந்திய முன்னாள் கேப்டனான பிஷன் சிங் பேடியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார்.


ரோகித் சர்மா மீது குவியும் விமர்சனங்கள்


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்ஷிப் தான் காரணம் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், அவர் தொடக்க வீரராகவே களமிறங்க வேண்டும் என, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.