வெள்ள பாதிப்பு - மத்திய குழு ஆய்வு
கடலூரில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பகண்டை, மேல் பட்டாம்பாக்கம் அழகியநத்தம், குண்டு உப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
டிச.12ல் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 11ம் தேதி இலங்கை - தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும். 12ம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
விஜய் பேச்சு - திருமாவளவன் விளக்கம்
விஜய் மீதும் அவரோடு நிற்பதிலும் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. நானும் அவரும் ஒரே மேடையில் நின்றால், அதை வைத்து அரசியல் சூதாட விரும்புகிறவர்கள் தமிழ்நாடு அரசியல் களத்தில் களேபரத்தை உருவாக்குவார்கள். அதற்கு இடம் தர, நான் விரும்பவில்லை என்பதை விக்கிரவாண்டி தவெக மாநாடு முடிந்த சில நாட்களிலேயே, புத்தக வெளியீட்டு விழா ஏற்பாட்டாளர்களிடம் முன்கூட்டியே கூறிவிட்டேன் - திருமாவளவன், விசிக தலைவர்
தாயை கொலை செய்து விட்டு நாடகமாடிய மகன் கைது
டெல்லி: தான் நீண்ட நாட்களாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்த தாயை கொன்று, நகைக்காக கொலை செய்யப்பட்டதாக நாடகமாடிய சவான் (22) என்ற இளைஞர் கைது. திருட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லாததை கவனித்த போலீசார் சவானிடம் விசாரித்த போது, தனது காதலியை திருமணம் செய்தால் சொத்தில் பங்கில்லை என தாய் கூறியதால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் இன்று தொடங்குகின்றனர். இதனைத்தொடர்ந்து ஷம்பு எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டு, விவாசாயிகளின் வாகனங்கள் கடக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் .
ஆன்லைன் முன்பதிவு நிறைவு: சபரிமலையில் குவியும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிரியா அதிபர் தப்பி ஓட்டம்?
சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் தலைநகரை சுற்றிவளைத்ததால், அதிபர் பஷார் அல் ஆசாத் அங்கிருந்து தப்பியுள்ளதாக தகவல். 2011ம் ஆண்டு டெரா பிராந்தியத்தில் அதிபர் ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப்போரை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தென்கொரிய அதிபர் மன்னிப்பு
அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் பகிரங்க மன்னிப்பு கோரினார். அதிபர் அறிவித்த அவசரநிலைக்கு எதிராக தென்கொரிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தென்கொரிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் அவசரநிலை கைவிடப்பட்டது.
இந்திய அணி தடுமாற்றம்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 35 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதன் மூலம் தற்போது வரை 3 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார் - சிராஜ்
நன்றாக பந்து வீசினாய் என்று டிராவிஸ் ஹெட் சொல்லவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பொய் சொன்னார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர் பேசும் விதம் தவறானது. அது எனக்கு பிடிக்காததால் கோபப்பட்டேன்! -முகமது சிராஜ், இந்திய வீரர்