காஷ்மீராக மாறிய ஊட்டி
உதகையில் அவலாஞ்சி, தலைகுந்தா, காந்தள் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் உறை பனி நிலவி வருகிறது, குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியஸ் பதிவு.
பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் வீடுவீடாக விநியோகம். 2.21 கோடி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறும்.
கவிழ்ந்த லாரி- பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்தால், அங்கு 500 மீ சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டேங்கரில் இருந்து தொடர்ந்து கியாஸ் வெளியேறி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்
"பஞ்சாப் விவசாயி ஜெகஜித் சிங்கின் உண்ணாவிரதத்தை பாதியில் நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல, அவருக்கு | மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளோம்! விரதத்தை பாதியில் முடிக்க உச்ச நீதிமன்றம் முயல்வதாக. பஞ்சாப் அரசு அதிகாரிகள் சிலர் ஊடகங்களில் கூறி வருகின்றனர் இது தவறான செய்தி. இந்த விவகாரத்தில் அவர்கள் பொறுப்பு இல்லாமல் நடந்தால் சிக்கல்தான் ஏற்படும்" - உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வு காட்டம்.
உயர் ரக கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹3.5 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட ஹைட்ரபோனிக் என்ற உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றன
பொங்கல் ரேசில் மதகஜராஜா:
பொங்கல் வெளியீடாக சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி நடித்த 'மத கஜ ராஜா' படம் ஜன. 12ல் ரிலீஸ் ஆக உள்ளது. 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்த படம், பல்வேறு காரணங்களால் 12 வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகிறது.
குடும்பத்தை இழந்த செல்லப்பிராணி
தென்கொரியா விமான விபத்தில் தனது உரிமையாளர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேரையும் இழந்து நிற்கும் Pudding என்ற நாய். அந்நாட்டைச் சேர்ந்த விலங்குகள் உரிமைகள் குழு, Pudding-ஐ மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.
காவலர் மீது வழக்குப்பதிவு
மன்னார்குடி-சென்னை ரயிலில் கதவை திறக்கவில்லை எனக்கூறி மாற்றுத்திறனாளியை கடுமையாக தாக்கிய தலைமைக் காவலர் பழனி மீது திருவாரூர் ரயில்வே காவல்துறையினர் தாமாக முன்வந்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கலாமா நகரில் இருந்து 85 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு