சௌமியா அன்புமணி கைது...


அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில்  போராட்டத்தில் கலந்து கொள்ள முயன்ற சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார்.


பள்ளிகள் திறப்பு: 


அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு.பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகளை இன்று விநியோகிக்க ஏற்பாடு.


சென்னையில் மலர்க்கண்காட்சி:


சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சியை  தொடங்கி வைக்த்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்க்கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 30 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.


பற்றியெரிந்த டெஸ்லா கார்: 


அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே வெடித்துச் சிதறிய டெஸ்லாவின் Cybertruck கார். ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயமடைந்தனர்.


கடும் நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி!


இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சினின் மிக நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டுவருவதாக தகவல். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், தற்போது மாத ஓய்வூதியமாக BCCI-யிடம் இருந்து ₹30,000 பெற்று வரும் அவர் வீடு பழுதுபார்ப்புக்கு ₹15,000 கட்டணம் செலுத்த முடியாமல், அதற்கு பதில் தனது ஐபோனை கொடுத்ததாகவும் இதே நிலை தொடர்ந்தால் அவர் தனது வீட்டையே இழக்க நேரிடும் என அவர் மனைவி வேதனை


புத்தாண்டு கொண்டாட்டத்தில்  திடீர் தாக்குதல்


அமெரிக்கா: நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்துக்குள் டிரக் மோதியதில் 15 பேர் சம்பவத்தில் உயிரிழப்பு. டிரக் ஓட்டுநருக்கு ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி! தாக்குதலில் ஈடுபட்டது சம்சத் தின் ஜபார் என்பவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.


2.55 கோடி பக்தர்கள் தரிசனம்


2024ம் ஆண்டில் திருப்பதி கோயிலில் 2.55 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து, ₹1,365 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 99 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை. 



திருச்செந்தூரில் கடல் அரிப்பு:


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு உள்ள கடற்கரையில் தொடர்ந்து 9வது நாளாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 அடி நீளத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் உள்ளது.


உடல் உறுப்பு தானம்- 1500 பேர் மறுவாழ்வு


உடல் உறுப்புகள் தானத்தால் தமிழகத்தில் 2024இல் 1,500 பேருக்கு மறுவாழ்வு அடைந்துள்ளனர். மேலும் 2024இல் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் உடல் உறுப்புகள் பெறப்பட்டு தானமாக அளிக்கப்பட்டது. 


புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்: 


சென்னை அரசு மருத்துவமனைகளில் 2025 புத்தாண்டு | (ஜன.01) அன்று 48 குழந்தைகள் பிறந்துள்ளன, எழும்பூர் மருத்துவமனையில் 12, கீழ்பாக்கத்தில் 3, ராயபுரத்தில் 20, திருவல்லிக்கேணியில் 13 குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது