Top 10 News: ஜன.29 வரை அவகாசம் நீட்டிப்பு, மிளகாய்த்தூளை திரும்பப் பெறும் பதஞ்சலி - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

ஸ்டாலினுக்கு பாராட்டு விழா
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா. சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்ததற்காக போராட்டக் குழுவினர் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாளமுத்து நடராசனின் சிலையை திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்
இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை, சென்னை மூலக்கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து "மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம்" எனவும் தொண்டர்கள் மத்தியில் முழக்கமிட்டார்.
NMMS தேர்வு விண்ணப்பம் - ஜன.29 வரை அவகாசம் நீட்டிப்பு!
2024-25ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் ஜன.29 வரை நீட்டிப்பு! இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி அவகாசம் நீட்டிப்பு
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, குடியரசு தின கொண்டாட்டம் காரணமாக இன்றும், நாளையும் சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குடியரசு தின விழா கொண்டாட்டம்
நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, டெல்லியில் 15 ஆயிரம் போலீசார், 70 துணை ராணுவப்படை குழுக்கள் குவிக்கப்பட்டு, 6 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்தோனேசிய பிரதமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு
மகாராஷ்ட்ரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை வளாகத்தில், நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தற்போது வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
மிளகாய்த்தூளை திரும்பப் பெறும் பதஞ்சலி
பூச்சிக்கொல்லி கலப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக 4 டன் மிளகாய்த் தூளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு. FSSAI-ன் உத்தரவை அடுத்து, தரத்தைப் பூர்த்தி செய்யாத 200 கிராம் பாக்கெட்டுகளை திரும்பப் பெற நடவடிக்கை. வாடிக்கையாளர்கள் பதஞ்சலி மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளை திரும்ப ஒப்படைக்க அந்நிறுவனம் வேண்டுகோள். அவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பித் தரப்படும் என தெரிவிப்பு.
30 ஆண்டுகளில் முதல்முறையாக..
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த 5 நாட்களில் துப்பாக்கிச் சூடு சம்பவம் மூலம் மரணமோ, காயமோ பதிவாகவில்லை என அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். 2024ம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கையை 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.3% லிருந்து 4.2% ஆகக் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிப்பு
‘எமர்ஜென்சி' படத்துக்கு இங்கிலாந்து சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு
நடிகை கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி திரைப்படத்தை திரையிட இங்கிலாந்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தல். இந்தப் படம் சீக்கிய சமுதாயத்தினரை தவறாக சித்தரிப்பதாக சீக்கிய பத்திரிக்கையாளர் சங்கம் உட்பட பல சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது, தியேட்டருக்குள் முகமூடி அணிந்த காலிஸ்தான் அமைப்பினர் உள்ளே நுழைந்து பார்வையாளர்களை மிரட்டி, திரைப்படத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
இந்தியா Vs இங்கிலாந்து டி20 போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியின் இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என கருதப்படுகிறது.