"எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Continues below advertisement

"அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை. ஆனால் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டம் தொடரும்.. 'இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு' என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு" -தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

இன்று அமைச்சரவை கூட்டம்

Continues below advertisement

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று கூடுகிறது. இதில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்" -ஓ.பி.எஸ்

"இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு மூழ்கும் கப்பல். இதில் யாரும் ஏறமாட்டார்கள். கட்சி அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். கருவாடு மீனாகாது. கறந்த பால் மடிபுகாது. நயவஞ்சகம் வெற்றி பெறாது” -எடப்பாடி பழனிசாமியை விமல்இத்த ஓ.பன்னீர் செல்வம்

விருதுநகர் மாவட்டத்திற்கு நிதி ஆயோக் பாராட்டு..

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் முன்னோடியாக திகழ்வதாக விருதுநகர் மாவட்டத்தை பாராட்டி ₹3 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது நிதி ஆயோக். பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதாரம் தொடங்கி, ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வது என பொது சுகாதாரத்தில் மக்களின் கூட்டு முயற்சியுடன் திறம்பட செயல்பட்டதாக X தளத்தில் பாராட்டு

மீண்டும் எகிறிய தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் உயர்த்து இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 64 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் விலை 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாயை எட்டியுள்ளது.

இணைய சேவை முடக்கம் - இந்தியா 2வது இடம்

2024ல் அதிக முறை இணைய சேவை முடக்கங்களை |சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம். ஆண்டு முழுவதும் 84 முறை இணைய சேவை முடக்கங்கள் நடந்து |இருப்பதாக Access Now அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல். இதில் மணிப்பூர் மாநிலம் முதலிடத்தில் உள்ளது, அங்கு 21 முறை |சேவை முடக்கம் நடந்துள்ளன. இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மியான்மார் 85 முறை இணைய சேவையை முடக்கியுள்ளது.

எருமை மாடுகள் வாங்குவதற்காக 2வது திருமணம் செய்த பெண்

உ.பி: ஹாசன்பூரில் முதலமைச்சரின் திருமண திட்டத்தின் கீழ் கிடைக்கும் ₹35,000 பணத்தில் எருமை மாடுகள் வாங்குவதற்காக 2வது திருமணம் செய்துகொண்ட பெண். இந்த திருமணத்தின் மூலம் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பிரித்துக்கொள்ளலாம் என புதிய மணமகனுடன் ஒப்பந்தமிட்டது கண்டுபிடிப்பு. இருவர் மீதும் வழக்குப்பதிவு. முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் 6 மாதங்களாக பிரிந்து வாழும் இவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா..!

உக்ரைனில் பதற்றத்தைத் தணிக்கவும், போர்களை முன்கூட்டியே நிறுத்தவும், ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே வார்த்தைப் போர் ஆழமடைந்து வரும் நிலையில், தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றியுள்ளது .

அரையிறுதியில் இந்தியா..!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், வங்கதேசத்தை நியூசிலாந்து அணி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியும் போட்டியிலிருந்து வெளியேற, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள லீக் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

முதல் தோல்வி யாருக்கு?

சாம்பியன்ஸ் ட்ராபி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோத உள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.