பொங்கல் தினத்தன்று தேர்வு


"துர்கா பூஜை அல்லது தீபாவளி அன்று இதுபோல தேர்வு தேதிகளை ஒன்றிய அரசு அறிவிக்க முடியுமா?" - பொங்கல் அன்று சி.ஏ. பவுண்டேஷன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வை ஒத்திவைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி


வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுபெற்றது. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



தங்கம் விலை கிடுகிடு உயர்வு


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.2,920 உயர்ந்துள்ளது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.56,000க்கு கீழே சென்றது. நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையானது


திருச்செந்தூரில் சேகர்பாபு ஆய்வு


திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி பாகன் உட்பட 2 பேர் உயிரிழப்பு - தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள யானை தெய்வானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்றார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.


இன்று அனைத்துக்கட்சி கூட்டம்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


அதானி மருமகனுக்கு நோட்டீஸ்


சூரிய மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்க ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில், அதானி குழு தலைவருக்கும், அவரது மருமகன் சாகருக்கும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. 21 நாட்களுக்குள் பதிலளிக்கவும் கெடு விதித்ததுள்ளது.


இந்தியா வருகிறார் இங்கிலாந்து மன்னர்


புற்றுநோயிலிருந்து விடுபட்டுவரும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்தவகையில், மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அரச தம்பதியின் இந்த பயணத்தின்போது, அவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கும் செல்வதாக அதில் கூறப்பட்டு உள்ளது.


பாகிஸ்தானில் 37 பேர் பலி


குர்ரம் மாவட்டத்தில் அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரும் கனரக மற்றும் தானியங்கி ஆயுதங்களால் ஒருவரையொருவர் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலிஷ்கேஷ், கர்கலி, குஞ்ச் அலிசாய் பகுதிகளில் துப்பாக்கி சூடு நடந்து வருகின்றது. இந்த சம்பவங்களில் இதுவரை 37பேர் உயிரிழந்துள்ளனர்.


வலுவான நிலையில் இந்திய அணி:


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்டின் மூன்றாவது நாளில், இரண்டாவது இன்னிங்ஸில் 320 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று இந்திய அண் வலுவாக உள்ளது. ஜெய்ஷ்வால் 140 ரன்களை குவித்து, கோலி உடன் சேர்ந்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.


இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்:


ஐபிஎல் 2025 சீசனில் விளையாட உள்ள வீரர்களுக்கான மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் ஏலம் நடைபெறும். 10 அணிகள் கைவசம் 640 கோடி ரூபாய் கைவசம் இருக்கம், 204 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் 500-க்கும் அதிகமான வீரர்களின் பெயர்கள் ஏலத்திற்கு பட்டியலிடப்பட உள்ளன.