வரலாறு காணாத விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டி ஒரு சவரன் ரூ.60,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 240 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7555க்கும் விற்பனையாகிறது
சீமான் மீது வழக்கு
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு. சீமான் வீட்டின் அருகே உருட்டுக்கட்டைகளுடன் கூடியிருந்த அக்கட்சித் தொண்டர்கள் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு. சில தினங்களுக்கு முன்பு சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற, பெரியார் உணர்வாளர்களை தடுக்க அங்கு ஏராளமான நாதக நிர்வாகிகள் குவிந்தனர்.
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் வரும் பிப்.21 வரை விண்ணப்பிக்கலாம். வரும் மார்ச் 22ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது
இளம்பெண் கடத்தல் - குடும்பமே கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, கணவரின் வீடு புகுந்து கடத்திச் சென்ற விவகாரத்தில் அப்பெண்ணின் பெற்றோர், சகோதரர், சகோதரி உள்பட 6 பேர் கைது. வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த அப்பெண் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அப்பெண்ணை மீட்டுள்ள போலீசார் அவரிடமும் விசாரணை
தமிழகம் வருகிறார் அமித் ஷா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 31-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பாஜக மாநிலத் தலைவர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தமிழக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் அடுத்த மாநிலத் தலைவர் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஆஸ்கர் நாமினேஷன்
ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட, 10 திரைப்படங்களில் கங்குவா உள்ளிட்ட 9 திரைப்படங்கள் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. அனுஜா என்ற குறும்படம் மட்டுமே, சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் பிரிவில் தேர்வாகியுள்ளது.
கர்நாடக அரசின் விருதை நிராகரித்த நடிகர் கிச்சா சுதீப்
கர்நாடக மாநில அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் நிராகரித்தார். இதுதொடர்பான விளக்கத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுகள் பெறுவதை நிறுத்திவிட்டேன். என்னை விட தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார். 2019ல் வெளியான 'பயில்வான்' படத்திற்காக இவருக்கு விருது அறிவிக்கப்பட்டது.
ட்ரம்புக்கு ஷாக் தந்த நீதிமன்றம்
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்யும், அதிபர் ட்ரம்பின் உத்தரவை அமல்படுத்த தடை விதித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ட்ரம்பின் உத்தரவு அப்பட்டமான அரசியலமைப்பு மீறல் எனவும் நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
ஷேவக் விவாகரத்தா?
இந்தியா கிரிக்கெட் அணிய்ன் வீரர் விரேந்தர் ஷேவாக் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இருவரும் அன் - ஃபாலோ செய்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தனித்தனியாக வாழ்ந்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்தியா - இங்கிலாந்து 2வது டி20 போட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை வந்துள்ள இரு அணி வீரர்களும், வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.