இளையராஜாவிற்கு அவமரியாதை


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து 'இசைஞானி' இளையராஜா வெளியேற்றம் அர்த்த மண்டக படியின் அருகே நின்றபடி கோயில் நிர்வாகம் அளித்த மரியாதை ஏற்றார். அதேநேரம், கருவறைக்குள் சென்ற அவர் வெளியேற்றப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.


தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலெர்ட்


தமிழ்நாட்டில் டிச. 17, 18 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. 12 முதல் 20 செமீ வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வாய்ப்பை இழந்த ஆதவ் அர்ஜுனா


என் 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுவரை 2 பேர் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன், அதுவும் இடைநீக்கம் மட்டுமே. ஆதவ் அர்ஜுனா விளக்கம் கேட்பார் அதற்கு விளக்கம் கொடுத்து விசாரிக்கலாம் என்றுதன் இருந்தேன். அதற்கான வாய்ப்பை தற்போது அவர் இழந்துவிட்டார் - திருமாவளவன், விசிக தலைவர்


அலுவல் அட்டவணையில் இருந்து மசோதாக்கள் நீக்கம்!


ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில், அடுத்த வார இறுதியில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல். அமளி ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த உத்தியை பாஜக பயன்படுத்துவதாக விமர்சகர்கள் கருத்து. இன்றைய அலுவல் அட்டவணையில் இருந்து அம்மசோதாக்கள் நீக்கப்பட்டிருந்தாலும் மக்களவை சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணைப் பட்டியல் மூலம் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உள்ளது


மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்


மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அமைச்சரவை விரிவாக்கம். 6 இணையமைச்சர்கள் உள்பட 39 பேர், அமைச்சர்களாக பதவியேற்பு. பாஜக-வுக்கு 19, ஷிண்டே சிவசேனாவுக்கு 11, அஜித் பவார் தேசியவாத காங்கிரசுக்கு 9 என, அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர அமைச்சரவை, அதிக எண்ணிக்கையில் விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.


பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்


நுரையீரலை பாதிக்கும் Idiopathic Pulmonary Fibrosis நோய்க்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜாகிர் உசேன்உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.


இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் - அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்


இந்தியாவில் HAL, தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் மூக் இங்க் ரூ.4.2 கோடி லஞ்சம் கொடுத்தது ஆதாரங்களுடன் அம்பலம். லஞ்சம் கொடுத்ததை அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையத்திடம் ஒப்புக்கொண்டது மூக் இங்க் நிறுவனம்! இவ்விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை தவிர்க்க 3 மடங்கு அபராதம் செலுத்தியுள்ளது. 


இலங்கை அதிபருக்கு வரவேற்பு 


இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை. பிரதமர் மோடி கைலுக்கி வரவேற்றார். 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர், இருநாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்.


தென்கொரிய அதிபர் பதவி நீக்கம்


தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல்  கடந்த 3ம் தேதி நாட்டில் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் அவசர நிலை கைவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட, அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


தடுமாறும் இந்திய அணி


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆன நிலையில், இந்தியா 39 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.