தமிழ்நாடு:


* தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து டாக்டர்களின் ஆலோசனைப்படி முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


 * கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.


* தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடிக்கு மது விற்பனையானது.


* தரமான பொங்கல் பரிசு தொகுப்பை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்.


இந்தியா:


* முதுநிலை மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு


* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் நாளை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல். திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்கா, பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.


* கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்துகிறார்.


* கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது.


* புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்.


உலகம்: 


* சவுதி அரேபிய அரச குடும்பத்து உறுப்பினரும் பெண்கள் உரிமைகளுக்காக போராடியவருமான 57 வயதான  பாஸ்மா 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.


* சைப்ரஸ் நாட்டில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை தொற்று சேர்ந்து புதிய வகையாக டெல்டாக்ரான் என்ற தொற்று கண்டுபிடிப்பு


* பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவால் 10 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் உயிரிழந்தனர்.


விளையாட்டு:


* மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் கேப்டவுனில் இந்திய வீரர்களுக்கு சித்தார் இசைக்கருவி மற்றும் தென்னாப்பிரிக்காவின் ட்ஜெம்பே ட்ரம்ஸ் இசைக்கருவி ஆகியவற்றுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


* ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து போராடி டிரா செய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண