தமிழ்நாடு:
- அதிமுக பொதுக்குழுவு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
- மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாம்பாறு அணையை சீர்மைக்கும் பணி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
- கனியாமுர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
- 62 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வசித்து வரும் 58 ஆயிரம் அகதிகளை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த இலங்கை அரசு குழுவை அமைத்துள்ளது.
இந்தியா:
- கேரளாவிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
- சமீப கலங்களாக புதிய தேசிய கல்வி கொள்கை கல்வித்துறை மாற்றியமைத்துள்ளதாக பிரதமர் மோடி பேச்சு.
- பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லி சென்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தினார்.
- டெல்லி ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு துணை நிலை ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் மீதான அவதூறு தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்.
- கேரளாவின் கண்ணூரில் கனமழை காரணமாக மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
உலகம்:
- டெல்லி வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை.
- டீஸ்டா நதி மற்றும் ரொங்கியா
- ஆஃப்கானிஸ்தானிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்பு ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக இன்று லிஸ் டிரஸ் பதவியேற்க உள்ளார்.
- ஹங்கேரியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி விபத்து. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
- சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 46 பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால் நான்காவது சுற்றில் அமெரிக்கா வீரர் டியஃபோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
- டைமெண்ட் லீக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நாளை களமிறங்க உள்ளார்.