தமிழ்நாடு:
- பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
- 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
- நரிக்குறவ மக்களுக்கு பழங்குடியினர் தகுதி வழங்கிய மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- அதிமுகவின் தொண்டர்களின் வழியில் தான் தன்னுடைய பயணம் இருக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளார்.
- ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீனா அதிபர் ஸி ஜிங்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக தகவல்.
- இந்திய விமானப்படைக்கு 100 டிரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்.
- கோவாவில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
- இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்க குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
- மும்பையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை.
- நாட்டின் பாதுகாப்பில் இளையோர் பங்கேற்கும் அக்னிபத் திட்டத்தை ஆதரிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
- எஃப் 16 போர் விமானங்களை சீரமைக்க பாகிஸ்தானிற்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க கூடாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.
உலகம்:
- இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று குறைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
- பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சுடுதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை தொடங்கியுள்ளது.
- கிழக்கு சீனாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக சீனாவின் ஷாங்காய் பகுதியில் கனமழை பெய்துள்ளது.
- ஜோர்டான் தலைநகர் அம்மானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவர்கள் பதவி காலத்தை நீட்டிக்கும் விதி அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் கர்மன் தாண்டி போராடி தோல்வி அடைந்தார்.