தமிழ்நாடு:



  • சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் இன்று கரைக்கப்பட உள்ளன.

  • சென்னையில் விநாயகர் சிலை கரைக்கப்பட உள்ளதால் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  •  தமிழ்நாடு முழுவதும் இன்று இலவச தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

  • வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைக்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

  • கனமழை காரணமாக குற்றாள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக 6 மாதங்களுக்கு பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்.

  • நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இந்தியா:



  • உக்ரைன் -ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டத்தாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.

  • கேரளாவில் பாம்பு படகு போட்டி இன்று நடைபெறுகிறது. 

  • டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தை வரும் 9ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

  • காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சுட்டில் மரணம் அடைந்தார்.

  • விலை வாசி உயர்வு தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சி போராட்டம்.

  • ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்கொள்ள உள்ளார்.

  • பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். 

  • டெல்லியிலுள்ள கூடாரங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.


உலகம்:



  • அமெரிக்காவின் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவும் பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எரிப்பொருள் நிரப்பும் போது ஏற்பட்ட கசிவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் அகதிகளை ஏற்றி சென்ற படகு கவிழந்து 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு.

  • மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழப்பு.

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம் கிட்டத்தட்ட விபத்தில் சிக்கியுள்ளது. அவரின் பாதுகாப்பு குழுவை சேர்ந்த கான்வாய் ஒன்று திடீரென தீபிடித்து கொண்டது.


விளையாட்டு:



  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது.

  • இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.