தமிழ்நாடு:
- ‘தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
- பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் 18 டன் தங்கம் நேற்று ஒரே நாளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிறது.
- விசாரணை கைதிகளை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்கவேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்தியா:
- பன்முகதன்மையே இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- எல்.ஐ.சி பங்குகளின் ஐபிஓ விற்பனைக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.
- ராஜ்தாக்கரே மீது மகாராஷ்டிரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஜெர்மனி எரிசக்தி நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை.
- கல்வி புரட்சியில் பிராந்திய மொழிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- இலங்கைக்கு 22,000 கோடி ரூபாயை தற்போது வரை இந்தியா நிதியுதவி அளித்துள்ளதாக தகவல்.
உலகம்:
- டென்மார்க் ராணியுடன் பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்து உரையாடினார். இந்தியா-டென்மார்க் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
- ராணுவ செயற்கைக்கோளை ரஷ்யா விண்ணில் ஏவியுள்ளது. ராணுவ பயன்பாட்டிற்காக இது ஏவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இலங்கையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அதில் அதிபருக்கு எதிரான நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்.
- உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றியுள்ளார்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தற்போது வரை 170 நாடுகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்