தமிழ்நாடு:



  • மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் இன்று பட்டண பிரவேச விழா நடைபெறுகிறது. 

  • நெல்லை கல்குவாரி விபத்தில் கைதான உரிமையாளர்களான தந்தை மற்றும் மகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்தியா:



  • பெட்ரோல், டீசல் கலால் வரியை மத்திய அரசு குறைந்துள்ளது. 

  • பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயுவிற்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • பெட்ரோல்,டீசல் கலால் வரி குறைப்பு மக்கள் நலன் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு.

  • தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைக்க முதலமைச்சர் சந்திரசேகரராவ் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை.

  •  


உலகம்:



  • ரஷ்யா போர் காரணமாக உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா 4000 கோடி டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. 

  • உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷ்யா படைகள் முற்றிலும் கைப்பற்றியுள்ளதாக தகவல்.

  • ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி ஆல்போன்ஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

  • ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

  • செஸ்சபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் தொடரில் உலக சாம்பியன் மேகனஸ் கார்ல்சனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார்.

  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண