தமிழ்நாடு:



  • நெல்லை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பொருட்காட்சி  தொடக்கம்.

  • குரூப் 2 தேர்வில் மைனஸ் மதிப்பெண் உண்டு என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. 

  • திருநெல்வேலி மாவட்டத்தில் கழுதை பால்  தயாரிக்கும் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. 

  • ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா:



  • கோதுமை ஏற்றுமதிக்கான தடை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கோடை காலத்தில் வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • சென்னை-திருப்பதி ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு.

  • ஜம்முவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

  • காங்கிரஸில் வேட்பாளரை தேர்வு செய்ய புதிய குழுவை அமைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்.

  • நீதிமன்றங்களில் அடிப்படை வசதிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை மற்றும் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.


உலகம்:



  • இலங்கைக்கு கடன் உதவி திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

  • இலங்கையில் பல மணி நேரம் மக்கள் எரிவாயுவிற்காக காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

  • உக்ரைன் மரியபோல் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப ரஷ்ய ராணுவம் 

  • கொரோனா பாதிப்பு வட கொரியா நாட்டில் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. 

  • பாகிஸ்தானில் கோடை வெப்பம் மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. 

  • தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் நேற்று நள்ளிரவு நடைபெற்ற கார் விபத்தில் இவர் மரணம். 46 வயதாகும் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் மறைவிற்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் அஞ்சலி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண