தமிழ்நாடு:



  • அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது. 

  • தமிழ்நாட்டில் 3000 கோடி ரூபாய் மதிப்பலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.

  • அதிமுகவின் பொருளாராக திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டத்தை வங்கிகள் ஏற்றுள்ளதாக தகவல்.

  • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


இந்தியா:



  • கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

  • கேரளாவில் உள்ளாடைகளை அகற்ற கூறிய விவகாரம் தொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர்.

  • சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்.

  • ஆயுஷ்மான் சுகாதார மேம்பாட்டு திட்டத்திற்கு இந்திய அரசு உலக வங்கி கடனை பெரும் என்று மத்திய அமைச்சர் தகவல்.

  • ஜம்மு-காஷ்மீர் நிதி நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை.


உலகம்:



  • இலங்கையின் புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

  • இந்தியாவில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி அதானி 4வது இடத்தை பிடித்துள்ளார்.

  • ஈரான் மற்றும் துருக்கி அதிகாரிகளுடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு.

  • பிரிட்டனில் நேற்று அதிகளவில் வெப்ப நிலை பதிவானது. 

  • ஸ்பெயின் நாட்டில் தண்ணீர் திருவிழாவில் மக்கள் உற்சாகமாக பங்கேற்று நடனமாடினர்.

  • புடான் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு அருகே சீனா ஒரு புதிய கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விளையாட்டு:



  • இங்கிலாந்து தொடருக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட உள்ளனர். 

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

  • சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மெத்வதேவ் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். ரஃபேல் நடால் 3வது இடத்தையும், நோவக் ஜோகோவிச் 7வது இடத்திலும் உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண