தமிழ்நாடு:



  • குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டு எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க சட்டப்பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  • மேட்டூர் அணைக்கு காவிரியிலிருந்து 1.23 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

  • மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

  • தமிழ்நாட்டில் 1.42 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வை இன்று எழுதுகின்றனர்.

  • தொடர் மழை காரணமாக பவானி சாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 


இந்தியா:



  • நாளை நடைபெற விருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களில் ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • பிரதமர் மோடி தலைமையில் இன்று நாடாளுமன்ற அனைத்து கட்சிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

  • குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் மேற்க வங்க ஆளுநர் ஜெகதீஷ் தன்கர் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்.

  • மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. 

  • குரங்கம்மை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழு கேரளாவில் ஆய்வு செய்து வருகிறது.

  • குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக தபி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 


உலகம்:



  • இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

  • இந்திய எல்லை பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

  • பிரான்சில் ஏற்பட்டுள்ள காட்டு தீயினால் பல லட்சம் மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

  • இலங்கை அதிபர் பதவியை கைபற்ற ரணில், சஜித் பிரமேதாசா உள்ளிட்ட 4 பேர் போட்டியில் உள்ளதாக தகவல்.

  • ரஷ்ய-உக்ரைன் போரில் 38,000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தகவல்.

  • பெல்ஜியத்தில் செங்குத்தாக தரையில் விழுந்து விமானம் விபத்து தொடர்பான காட்சிகள் வேகமாக வைரலாகி வருகின்றன.


விளையாட்டு:



  • இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் இறுதிப் போட்டியில் இன்று களமிறங்குகிறார்.

  • சிங்கப்பூர் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களமிறங்குகிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண