தமிழ்நாடு:
- அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம்.
- அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.
- ஊட்டியில் தொடரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணை 90 அடி நீர் மட்டத்தை எட்டியுள்ளது.
- கர்நாடகாவில் மழை காரணமாக ஒகேனக்கல் பலத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- நீலகரி மற்றும் உதகை இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியா:
- பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் சென்னை வருகிறார்.
- கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
- கர்நாடகாவிலுள்ள காவிரி, துங்கபத்ரா உள்ளிட்ட பல்வேறு நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக தற்போது வரை 17 பேர் பலியாகி உள்ளதாக தகவல்.
- நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
- நாளை முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- இந்தியா-சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சு வாரத்தை வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
- இங்கிலாந்து புதிய பிரதமருக்கான முதல் சுற்று தேர்வில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார்.
- கோட்டபய ராஜபக்ச மாலத்தீவுகளிலிருந்து சிங்கப்பூர் தப்பி சென்றுள்ளதாக தகவல்.
- இலங்கையில் அவசரநிலை மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- ரஷ்ய தாக்குதலில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்.
- க்ரீஸ் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் விழுந்தது.
விளையாட்டு:
- இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில் இந்தியாவின் மெஹூலி கோஷ் மற்றும் துஷார் மானே தங்கம் வென்று அசத்தல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்