தமிழ்நாடு:
- டெல்லி சென்று இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்தார்.
- அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஒபிஎஸ் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
- அதிமுகவின் தலைமை கழகம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
- வடபழனி நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு.
- சென்னை வானகரத்தில் எண்ணெய் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தின் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
இந்தியா:
- விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானிய அளிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
- நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற க்யூட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் அடுத்த வாரம் தேர்வு நடத்த திட்டம்.
- பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார்.
- இலவசங்களுக்கு எதிரான மனுவில் ஆந்திர அரசையும் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- 5ஜி சேவை வரும் டிசம்பருக்கு பிறகே அமலுக்கு வரும் என்று தகவல். முழுமையாக செயல்பாட்டிற்கு வர இரண்டரை ஆண்டுகள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாஜகவின் நாடாளுமன்ற குழுவில் தமிழ்நாட்டின் வானதி ஸ்ரீனிவாசன் இடம்பெற்றுள்ளார்.
உலகம்:
- இரண்டு நாள் அரசு முறை பயணமாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றுள்ளார்.
- இந்தியா-அமெரிக்க ராணுவ வீரர்க்ள கூட்டாக பயிற்சி மேற்கொண்டனர்.
- ஆஃப்கானிஸ்தானின் காபுல் பகுதியில் மசூதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
- வடகொரியா மீண்டும் குரூஸ் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
- உக்ரைன் ரஷ்ய படை தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
- தென்மேற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பு.
- இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலை.
- ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்க முயற்சிகள் எடுத்து வரப்படுகின்றன.
விளையாட்டு:
- ஜிம்பாவே அணிக்கு எதிராக் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
- தன்னுடைய மனநிலை தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்