தமிழ்நாடு:


* மேகங்கள் மறைந்து மறைந்து வந்ததால் கணிக்க முடியவில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 


* தமிழ்நாட்டில் இன்று, நாளை மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் சந்தித்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தாகவும், காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.


* ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை, என்ன சாதித்தது 8 மாதங்களில் இந்த திமுக அரசு? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


* ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை வாங்குவதற்கு டாடா குழுமம் ஆர்வம் காட்டியதாகவும், நேற்று ஃபோர்டு நிறுவனத்தை சந்தித்ததாகவும் தங்கம் தென்னரசு கூறினார்.


* புத்தாண்டிற்கு பிறகு புதிய அமைச்சரவை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


* மதுரையில் ஜனவரி 12-இல் மோடி பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பிரதமர் மோடி பங்கேற்று பொங்கல் கொண்டாட உள்ளதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்


இந்தியா:


* கர்நாடக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


* இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக எழுந்த புகார் குறித்த மத்திய அரசின் எதிர்வினையைக் கிண்டல் செய்துள்ளார் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. 


* புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சன்னிலியோனை அழைத்து வந்து நடனம் நடத்தவுள்ளதாக கூறி இதற்கு அனுமதி அளித்த சுற்றுலாத்துறையை கண்டித்து நடன நிகழ்ச்சி நடத்தும் இடமான பழைய துறைமுக வாயில் முன்பு தமிழர்களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


* கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100-ஐ கடந்தது.


உலகம்:


* நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2022 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கையுடன் பொதுமக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.


* அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் 2 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


விளையாட்டு:


* கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2021 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இதில் அஸ்வின், ரோகித் சர்மா உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


* 2021 டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனைக்கான விருதிற்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா, இங்கிலாந்தின் டேமி பியுமோண்ட், நாட் சிவர், அயர்லாந்தின் கேபி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


* 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை  வென்று இந்தியா சாம்பியனானது