தமிழ்நாடு : 



  • இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு 

  • தமிழ்நாட்டில் 56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கபட்டுள்ளது - மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 

  • புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதார மானிய நிதி பொறுப்பு : தமிழ்நாடு அரசு அழைப்பு 

  • மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஓயாது உழைப்பேன் : முதல்வர் முக ஸ்டாலின் 

  • அதிமுக ஆட்சி காலத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முறைகேடு 

  • தற்போது கொரோனா தொற்றுக்கு சென்னையில் 0.2% மட்டுமே பாதிப்பு


இந்தியா : 



  • உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க 7 விமானங்களை இயக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் 

  • உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு அனைத்து விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது - மோடி 

  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 10, 273 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 

  • உக்ரைனில் கார்கிவ், கீவ், சுமி, நகரங்களில் உள்ள இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் - இந்திய தூதரகம் தகவல் 


விளையாட்டு : 



  • இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரை முழுமையாக கைப்பற்றியது.


உலகம் : 



  • ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அவரச சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது 

  • ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படை தயார் நிலையில் இருக்க  அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். 

  • உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, மால்டோவா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் 3.68 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என்று ஐ.நா அவை அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண