தமிழ்நாடு:



  • தமிழக குடியரசு விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

  • தமிழ்நாடு முழுவதும் இந்த அலங்கார ஊர்தி எடுத்து செல்லப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு. 

  • 10 மற்றும் 12 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடத்த வேண்டும் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை.

  • தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வர எலோன் மஸ்கிற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு.

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,888 பேருக்கு மேலும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 


இந்தியா:



  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 

  • இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

  • நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று மத்திய அரசு தகவல்

  • பஞ்சாப் முதலமைச்சரின் உறவினரின் வீட்டில் அமலாக்கத்துறை பரிசோதனை செய்து வருகின்றனர்.

  • கடற்படை கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 3 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர்.


உலகம்:



  • தாலிபன்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தலைவர்கள் ஆஃப்கானிஸ்தான் சென்றுள்ளனர்.

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்மூடி தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது என்று உலக சுகாதார மையம் வேண்டுகோள்.

  • உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

  • அபுதாபி தீவிரவாத தாக்குதலில் பலியான இரண்டு இந்தியர்களுக்கு நிதியுதவி வழங்கி ஐக்கிய அமீரக அரசு அறிவிப்பு.

  • விஜய் மல்லையா வசித்து வரும் லண்டன் பங்களாவை அரசு நிர்வாகம் கைபற்றப்பட உள்ளதாக தகவல். 


விளையாட்டு:



  • தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

  • இந்திய ஒருநாள் அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வீரர் அஸ்வின் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 

  • இந்திய டெஸ்ட் அணியை முழுநேரமாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பெருமை என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண