தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- தமிழ்நாட்டில் நேற்று முழு ஊரடங்கில் 726 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.
- தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
- தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மீது வழக்குப்பதிவு
- புறநகர் ரயிலில் இன்று முதல் இரண்டு தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
இந்தியா:
- கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
- புதுச்சேரி இன்று 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
- பிரதமர் பஞ்சாப் பயண பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.
- நாடாளுமன்ற ஊழியர்களில் 400 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- விக்ராந்த் கப்பலில் 3ஆவது சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.
- ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.
உலகம்:
- கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையில் 164 பேர் பலியாகியுள்ளனர்.
- நியூயார்க் குடியிருப்பில் தீ விபத்தில் 19 பேருக்கு காயம்.
- சைப்ரஸ் நாட்டில் டெல்டாக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவிவருவதாக தகவல்.
- 3 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி இளவரசி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
- இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு கேப்டவுன் சென்ற இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ஆஷஸ் டெஸ்ட்: சிட்னி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி போராடி டிரா செய்தது.
- ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் கடந்த உஸ்மான் கவாஜா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்