தமிழ்நாடு:


* ஆவினில் வேலை வாங்கி கொடுப்பதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.


* நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றவை - ஆளுநர் ஆர்.என்.ரவி


* தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - அமைச்சர் மா.சுப்ரமணியன்


* தமிழ்நாட்டில் நாளை  இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாளை இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.


* அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக்கல்லூரிகள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழ்நாடுஅரசு


* நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியா:


* பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது.


*  மூன்று நாட்களில் 15 -18 வயதுக்குட்பட்ட 1 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை. 


* புல்லி பாய் செயலியில் பெண்களை ஏலம் விட்டதற்காக 18 வயது இளம்பெண் மற்றும் 21 வயது மாணவரை போலீசார் இன்று கைது செய்தனர். 


உலகம்:


* குவைத்தில் வீட்டை விட்டு ஓடிப்போன சிங்கக் குட்டியை அசால்டாக அள்ளி அணைத்து பெண் ஒருவர் தூக்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


* அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். 


* தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல் உதாசீனப்படுத்துவேன் என்று பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரான் பேசியது சர்ச்சையானது.


விளையாட்டு:


* கடந்த 10 ஆண்டுகளில், நியூசிலாந்து மண்ணில் நியூசி அணியை வீழ்த்தி இருக்கும் முதல் ஆசிய அணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது வங்கதேச அணி.


* இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், அந்த அணி வெற்றி பெற இன்னும் 200 ரன்கள் தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்கா ரன் விவரம்: 40/0


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண