தமிழ்நாடு:


 * சென்னை அடுத்துள்ள பெருங்குடி பகுதியில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தனியார் வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.


* 2022-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.


* கொரோனாவின் மூன்றாவது அலை தமிழ்நாட்டில் ஆரம்பித்துவிட்டது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


* பிரதமரை வரவேற்பது தமிழ்நாடு அரசின் கடமை என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.


இந்தியா:


* இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தற்போதுவரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525  ஆக அதிகரித்துள்ளது.


* திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கங்கனா ரனாவத், 2022-இல் தனக்கு குறைவான போலீஸ் புகார்கள், எஃப்ஐஆர்கள் மற்றும் அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


*  அதிகரிக்கும் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் மேற்குவங்கத்தில் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


உலகம்:


* வரும் ஜனவரி 4 முதல், பிளாக்பெர்ரி 10, 7.1 ஓஎஸ் மற்றும் அதற்கு முந்தைய  கிளாசிக் சாதனங்களுக்கான ஆதரவை பிளாக்பெர்ரி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.


*  அமெரிக்காவில் திருடன் என தவறாக நினைத்து தனது மகளை சுட்டுக் கொன்றுள்ளார் போலீஸ் ஒருவர்.


விளையாட்டு:


* தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.


* இந்திய அணியில் இருந்து என்னை வெளியேற்றியது குறித்து தோனி கடைசி வரை விளக்கம் தரவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண