இந்தியா


லடாக் எல்லை மோதல் காரணமாக இந்தியா- சீனா இடையே 13 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. . இந்த பேச்சுவார்த்தையில் லே ஐ மையமாக கொண்டு செயல்பட்டு வரும் 14ஆவது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி. கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தையில் நடைபெற்றது.


உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 6 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அஜய் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 


கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கும், கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படும் 3 வகையான சிரிஞ்சுகள், ஊசிகளை 3 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 நாடு முழுவதும் 712 காலிப்பணியிடங்களுக்கான இந்திய குடிமைப்பணிக்கான முதல் நிலை தேர்வுகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வை1,897 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


தலைநகர் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதற்கு மத்தியில், நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தேவையில்லாத பீதி நிலவி வருவதாகவும், கெயில் மற்றும் டாடா நிறுவனத்தில் இருந்து வரும் தவறனான தகவலே இதற்கு காரணம் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.


ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அகழாய்வு பணிகள் இன்று துவங்கியது.


தமிழ்நாடு


திராவிட மாடலில் தமிழகம் வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் இதனைத் தெரிவித்தார்.


தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி நடைபெற்றது. 30000 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக 35,000 அடி உயரம் கொண்ட பூண்டி நீர்த்தேக்கம் 34,000 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தின் வழியாக வினாடிக்கு 1000 கன அடிவீதம் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


பச்சையப்பாஸ் சில்க்ஸில் கடந்தவாரம் நடத்தப்பட்ட ரெய்டில். ரூ.650 கோடி கணக்கில் வராத பணம்  கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 


ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்து கடனாளியாக மாறிய பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது


தமிழகத்தில் மருத்துவ மனையில் செவிலியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்காக முதலமைச்சர் அறிவுரையின் பேரில் 4,900 செவிலியர்கள் நியமனம் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


உலகம்


எரிபொருள் பற்றக்குறையின் காரணமாக லெபனானின் முக்கிய மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் நாடே இருளில் மூழ்கியுள்ளது.


பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை எனப் போற்றப்படும் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார்.