தலைப்புச் செய்திகள்
- தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்
- தமிழ்நாடு முழுவதும் வரும் 28-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைககளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் முதல் வகையாக பிரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தொற்று பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, உள்ளிட்ட 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாக பிரிககப்பட்டுள்ளது.
- இரண்டாவது வகை மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தவிர, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
- வாடகை ஆட்டோக்கள், டாக்சிகள் இ-பதிவுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்கள் மூன்றாவது வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவது வகை மாவட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
- இந்த மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
- மூன்றாவது வகை மாவட்டங்களில் அரசு பொதுப்போக்குவரத்தை அனுமதித்துள்ளது.
- இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் செயல்படலாம். குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்த பேருந்து சேவையானது மாவட்டங்களுக்குள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
- மூன்றாவது வகை மாவட்டங்களில் பொதுமக்கள் இ-பதிவு இல்லாமல் பயணிக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- சென்னையில் புதிய ஊரடங்கு தளர்வுகள்படி இன்று காலை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.
- சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
- காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
- 16வது சட்டப்பேரவையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் தி.மு.க. ஆட்சியின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
- தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை – தமிழக நிதியமைச்சர்
- ஆபாச பேச்சு- பப்ஜி மதனின் யூடியூப் சேனல் முடக்கம
- நடிகையின் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
- தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
- தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு.
- மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : 217 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா