Breaking News Live | ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமிக்ரான்..! இந்தியாவில் பாதிப்பு 21 ஆக அதிகரிப்பு...!
Breaking News Live Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா - ரஷ்யா இடையே நாளை முதல்முதலாக இருதரப்புப் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய - பசிஃபிக் சூழல், இரு நாடுகளுக்கு இடையேயான மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
மஹாராஷ்ட்ராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு கொரோனா தொற்று.. ஓமைக்ரான் பாதிப்பா? என்னும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் உறுதியானது.
கடந்த 4 நாட்களாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த மயங்க் அகர்வால், அஜாஸ் பட்டேல் சுழலில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து 62 ரன்களில் வெளியேறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு தினம் இன்று. இதையொட்டி, அதிமுகவினர் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்
Background
Breaking News Live Tamil:
கழகத்தினர் ஒற்றுமையுடன் இருந்தால்தான், எதிரிகளை வெல்லமுடியும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்திருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்றுமுதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனை படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது. தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புக்களின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன். ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியத்தை உணர்ந்தாகவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -