தமிழ்நாடு :



  • உக்ரைன் மாணவர்களின் மருத்துவக் கல்வி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி : புதுச்சேரியில் 1-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 25-ந் தேதி வரை பள்ளி விடுமுறை

  • அசாம் யானைகளை ஆய்வு செய்ய வரும் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரேணிகுண்டாவிற்கு மணிக்கு 143 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்ட ரயில் இயக்கம்

  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்


இந்தியா :



  • பிரதமர் மோடிக்கு இன்று 72வது பிறந்த நாள் – தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

  • பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாட பா.ஜ.க. திட்டம்

  • புதிய சரக்குப்போக்குவரத்து கொள்கையை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி

  • நமீபியாவில் இருந்து 8 சிவிங்கப் புலிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் இந்தியா வருகை

  • நமீபியாவில் இருந்து வரும் சிவிங்கப் புலிகளை வனத்துறையிடம் ஒப்படைக்கிறார் பிரதமர் மோடி

  • உஸ்பெகிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

  • குறைந்த எடைகொண்ட ஹெலிகாப்டர்கள் விமானப்படையிடம் வரும் அக்டோபர் 3-ந் தேதியிடம் ஒப்படைப்பு

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கப்பல் நடுக்கடலில் மூழ்கியது – 19 பேர் மீட்பு

  • அசாமில் 8 பழங்குடி கிளர்ச்சியாளர்களுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம்

  • டெல்லி வக்பு வாரிய ஊழல் விவகாரம் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானுல்லா கான் கைது

  • உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் – ரயில்வே அமைச்சர்

  • பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட 13, 147 வழக்குகள் ஒரே நேரத்தில் ரத்து – உச்சநீதிமன்றம்


உலகம் :



  • உக்ரைனுக்கு கூடுதலாக 600 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள் வழங்கப்படும் – அமெரிக்கா அறிவிப்பு

  • மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ளதாக பாகிஸ்தான் மீண்டும் திட்டவட்டம்

  • போர் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இருக்காது – ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்

  • அர்மேனியா – அஜர்பைஜனில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் ஒரே வாரத்தில் 210 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  •  


விளையாட்டு :



  • துலீப் கோப்பை போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் அய்யர் தலையில் பந்து தாக்கியதால் பரபரப்பு

  • வேர்ல்ட் ஜியான்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மகாராஜாஸ் அணி அபார வெற்றி