தமிழ்நாடு:
- தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்: உடனடியாக அமலுக்கு வந்தது
- 2வது முறையாக போட்டியின்றி திமுக தலைவராகிறார் முக ஸ்டாலின்; மீண்டும் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வாகின்றனர்.
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் 30 விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைக்கு அனுமதி : தீயணைப்பு துறை கடும் கட்டுப்பாடு
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பம்புகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
- அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ஆம் தேதி கூடவுள்ளது என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் 1.08 லட்சம் பேர் முதலீடு செய்திருந்த ஆருத்ரா நிறுவனத்தின் மோசடித் தொகை மேலும் 300 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- திருப்பதி திருமலை : புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு 30 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்த பக்தர்கள்
- ஆசியாவின் இரண்டாவது பணக்காரர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, சிங்கப்பூரில் ஒரு குடும்ப அலுவலகத்தை அமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற போக்குவரத்து செயலிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்டோக்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
- 1 லட்சத்துக்கும் அதிகமான சதுர அடி நிலத்தை ரயில்வேயில் பணியில் சேர்வதற்காக லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிலர் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
உலகம்:
- பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலருக்கு அமைதிக்கான நோபல் பரிசு; ரஷ்ய, உக்ரைன் அமைப்புகளுக்கு பகிர்வு
- உலகின் மிக வயதான நாய் பெபில்ஸ் தனது 22வது வயதில் உயிரைவிட்டது. டெடி ஃபாக்ஸ் டெரியர் என்ற வகையறா நாயான பெபில்ஸ் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
ரஷ்யாவுடனான எல்லை தாண்டிய கிரிட்டோ பரிமாற்ற முறைக்கு ஐரோப்பிய யூனியன் முழுமையாக தடைவிதித்துள்ளது.
மெக்ஸிகோவில் இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற வன்முறையில் 20 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
- வெனிசுலாவின் மராகே நகரில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக உருவெடுத்தது.
விளையாட்டு:
- பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் பெண்கள் அணியிடம் இந்திய பெண்கள் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
- அடுத்த மாதம் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ப்ரோ கபடி போட்டியின் முதல் நாள் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி வெற்றி