தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் இன்று விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

  • நவராத்திரியின் 10வது நாளான இன்று விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.

  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது.

  • கஞ்சா வியாபாரிகளின்  2,2317 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தகவல்.

  • தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.


இந்தியா:



  • ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

  • பிரதமர் வருகையை ஒட்டி ஹிமாச்சலப் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • குஜராத்ட்தில் 317 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் காவல்துறையின் சோதனையில் சிக்கியுள்ளது.

  • உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழந்து 25 பேர் உயிரிழப்பு.

  • கேரளாவில் கோயில் திருவிழா குழுவினருடன் காவல்துறையினர் மோதல். 

  • மைசூர் அரண்மனை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

  • மங்களூரு தசாரா விழாவில் புலி வேடமிட்டு பலர் நடனமாடினர்.

  • தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு.

  • புதிய தேசிய கட்சியின் அறிவிப்பை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று வெளியிட உள்ளார்.

  • 4 நகரங்களில் இன்று முதல் சோதனை முயற்சியில் 5ஜி சேவை அளிக்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.


உலகம்:



  • உக்ரைன் அதிபர் ஸலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் உரையாடியுள்ளார்.

  • மியான்மரிலிருந்து 13 தமிழவர்கள் டெல்லி வழியாக இன்று சென்னை திரும்பினர்.

  • ரஷ்ய ராணுவத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தகவல்.

  • துபாயில் அமைந்துள்ள இந்து கோயிலில்

  • ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் மீண்டும் வாங்க உள்ளதாக தகவல்.

  • ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் மீட்டுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஸலென்ஸ்கி தகவல்.

  • ஆஃப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ரூபாய்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு:



  • இந்தோரில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்தியாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. 

  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

  • குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டிகளில் மகளரிக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸை வீழ்த்தி தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் வென்றார்.

  • தேசிய விளையாட்டு போட்டிகளில் 14 தங்கப் பதக்கங்களுடன் தமிழ்நாடு தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

  • உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் 6 ரெட்ஸ் ஸ்நூக்கர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீஹரிகிருஷ்ண சூர்யநாராயணன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.