தமிழ்நாடு : 



  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

  • ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை தற்கொலை

  • நெடுஞ்சாலை துறைக்கு ரூ.58.43 கோடியில் 3 பாலங்கள்: முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

  • ஓசூர் அரசு பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கு திடீர் மூச்சுத்திணறல், வாந்தி - மயக்கம் : காவல்துறையினர் தீவிர விசாரணை

  • தீபாவளி வசூல் புகார் தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை : 1.12 கோடி பறிமுதல்

  • கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞருக்கு வரும் 28-ந் தேதி வரை நீீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

  • சென்னை மாநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை இணைத்து 5 ஆயிரத்து 904 சதுர கிமீ பரப்பளவு விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 147வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


இந்தியா: 



  • கேரளாவில் 2 பெண்கள் நரபலி : சந்தேக வளையத்தில் நடிகர்கள் இருப்பதாக தகவல் 

  • மும்பையில் நவம்பர் 1-ம் தேதி முதல் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சக பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

  • இமாச்சல பிரதேச தேர்தல் வரும் நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்

  • சென்னை முதல் பெங்களூர் வரை வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல்

  • குப்பை கழிவுகள் மேலாண்மை செய்வதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக டெல்லி அரசுக்கு ரூ.900 கோடி அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.

  • போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்களில் ஒரு பகுதியினர் இனி உஸ்பெகிஸ்தானில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலகம்: 



  • குண்டுவெடிப்பில் சேதமடைந்த கிரிமியா அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு சீரமைக்க ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

  • ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்கேற்க, பெண்கள் அனுமதி

  • உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுடன், அதன் நட்பு நாடான பெலாரசும் இணையலாம் என தகவல்


விளையாட்டு: 



  • மகளிர் ஆசியக்கோப்பை டி20 இறுதிப்போட்டி : இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை

  • உலக கோப்பை டி20 தொடருக்கான ரோகித்சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.