* ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா. 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா இந்தியாவிற்கு முதல் தனிநபர் தங்கப்பதக்கத்தை வென்றார். அதன்பின்னர் இரண்டாவது தனிநபர் தங்கத்தை நீரஜ் சோப்ரா வென்றுள்ளார்.
* 121 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்ஸில் இந்தியா வரலாறு படைத்தது. ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.
* ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.
* டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
* இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. அவசர கால தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா கூறியுள்ளார்.
* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,985 (நேற்று 1,997) பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேரும், ஈரோடில் 198 பேரும், சென்னையில் 194 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
* மாநில அரசின் பல்வேறு துறைகளிலும் இருந்த ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணாஅறிவாலயத்தில் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
* தமிழ்நாடு நிதிநிலை குறித்து நாளை வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வரவு, செலவு, வருவாய் இழப்பு, மாநிலத்தின் கடன் நிலை பற்றிய விவரங்கள் வெளியாகிறது.
* தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
* ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மற்ற சமூக ஊடகம் மூலம் அவர் தொடர்பில் இருப்பார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் தண்ணீர் மற்றும் மின்சாரம் நிறுத்தம்.
* மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரன் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 209 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான இன்று வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் தேவைப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற