Headlines Today : இன்று முதலீட்டாளர்கள் மாநாடு..! புதுச்சேரியில் தீவிரமாகும் காலரா..! எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா அபாரம்..! இன்னும் பல

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு :

Continues below advertisement

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு – பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
  • 11-ந் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் – நத்தம் விஸ்வநாதன் தகவல்
  • ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பில்லை – ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம்
  • பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்பு – 2 பெண்களை கைது செய்து காவல்துறை விசாரணை
  • சென்னையில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை – அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
  •  

இந்தியா :

  • புதுச்சேரியில் தீவிரமாக பரவும் காலரா – காரைக்காலில் மட்டும் இருவர் உயிரிழப்பு
  • காலரா தொற்று அபாயத்தால் காரைக்காலில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • வாரிசு அரசியலால் நாட்டு மக்கள் சலிப்படைந்துவிட்டனர் – பிரதமர் மோடி
  • இந்தியாவில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆதிக்கம்தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா
  • மகாராஷ்ட்ரா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு – புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் வாக்கெடுப்பு
  • இந்தியாவின் அழகியாக கர்நாடகாவைச் சேர்ந்த சினிஷெட்டி தேர்வு

உலகம் :

  • இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த முதிய தம்பதிகளில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு – முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
  • டென்மார்க் நாட்டில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு

விளையாட்டு :

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரம் – 257 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தல்
  • முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் பார்ஸ்டோ சதம் விளாசல் : இரண்டாவது இன்னிங்சில் புஜாரா அரைசதத்துடனும், ரிஷப்பண்ட் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement