- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா
- தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
- புதிய தளர்வுகள் ஏதுமின்றி ஏற்கனவே உள்ள தளர்வுகள் தொடரும் என்று முதல்வர் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் இருப்பதற்கு பொதுமக்கள் விழப்புணர்வுடன் இருக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- கொரோனா தடுப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை
- சென்னையில் நேற்று முன்தினம் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 215 ஆக உயர்வு
- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை
- லடாக் எல்லை விவகாரம் : இந்தியா – சீன ராணுவ தளபதிகள் இடையே இன்று 12வது சுற்று பேச்சுவார்த்தை
- மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் – பிரதமர், மத்திய அமைச்சரிடம் கர்நாடக புதிய முதல்வர் நேரில் கோரிக்கை
- 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம் – காலை 11 மணி முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்
- பிச்சைக்காரர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த வேண்டும் – அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்
- மாநிலங்களுக்கு இதுவரை 2.15 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்
- பெகசஸ் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை – உச்சநீதிமன்றம் தகவல்
- சுதந்திர தின உரைக்கு பொதுமக்கள் இணையதளம் மூலமாக ஆலோசனை வழங்கலாம் – பிரதமர் மோடி அறிவிப்பு
- எல்லைப் பிரச்சினை விவகாரம் : அசாம் முதல்வர் மீது மிசோரம் போலீசார் வழக்குப்பதிவு
- கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் – மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரிக்கை
- கொரோனா தடுப்பு விதிகளை கேரள மக்கள் கடைபிடிக்க வேண்டும் – ராகுல்காந்தி வேண்டுகோள்
- ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் இரு நாட்களாக தொடரும் கனமழை : 9 பேர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
- தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்காக தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு
- மூணாறில் அரசு கட்டிடம் வெடிவைத்து தகர்ப்பு – இடிந்து விழும் அபாயம் இருந்ததால் நடவடிக்கை
- டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்
இன்று காலை முக்கியச் செய்திகள்: ஒலிம்பிக்... ஊரடங்கு... கொரோனா... மேகதாது... இன்னும் பல!
சுகுமாறன்
Updated at:
31 Jul 2021 07:09 AM (IST)
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
பிவி.சிந்து
NEXT
PREV
Published at:
31 Jul 2021 07:09 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -