தமிழ்நாடு :



  • தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் : உயர்நீதிமன்றம் அதிரடி 

  • அதிமுக பொதுக்குழு: ஈபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு - இன்று விசாரணை

  • மின்கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்பதாக கூறுவது கபட நாடகம்போல் தோன்றுகிறது : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

  • அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை காணொலி காட்சி வாயிலான தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின் 

  • தமிழகம், புதுச்சேரியில் 26ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

  • தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் 

  • தமிழகத்தில் 2020 - 2021 ஆண்டைவிட 2021 - 2022 ம் ஆண்டு நெற்பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.


இந்தியா : 



  • விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 

  • அரசியல் களத்திற்கு வருகிறாரா ஜூனியர் என்.டி.ஆர் : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு 

  • இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்காரவாதி ரஷ்யாவில் கைது

  • புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பதலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் :  முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

  • சரஸ்வதி பூஜைக்கு அரசு ஊழியர்களுக்கு 11 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு : மேற்கு வங்க அரசு அறிவிப்பு

  • ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பிரிவினருக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல்


உலகம் : 



  • தன்பால் ஈர்ப்பை சட்டபூர்வமாக்கியது சிங்கப்பூர்: பிரதமர் லீ லூங் அறிவிப்பு

  • இலங்கையில் மண்ணெண்ணெய் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது : ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 340 க்கு விற்பனை

  • வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியது. 

  • தனது பேச்சை தணிக்கை செய்வதற்காகவே, யூடியூப் பக்கத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது : முன்னாள் பிரதமர் இம்ரான் கான்


விளையாட்டு :



  • ஜிம்பாவே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் கடந்து அசத்தியுள்ளார்.

  • ஜிம்பாவே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்த ஆண்டில் மட்டும் 3 வது முறையாக வீழ்த்தி தமிழத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். 

  • இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.