தமிழ்நாடு:



  • 17 மருத்துவ கல்லூரிகளின் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி ஜனவரி 12-ந் தேதி தமிழ்நாடு வருகை

  • தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் மருத்துவ கல்லூரியின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்

  • எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

  • எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுகளை இணையதளங்கள் மூலம் அனுப்ப சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  • தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு 8 ஆயிரத்து 883 மருத்துவ படிப்பு இடங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  • ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேர் படகுகளுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

  • உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இன்று தேரோட்டம்


இந்தியா :



  • வி.வி.ஐ.பி. எனப்படும் மிக மிக முக்கிய பிரமுகர்களின் வான்வழி பயணத்திற்கான நெறிமுறைகள் மாற்றி அமைக்கப்படும் – விமானப்படை தளபதி

  • குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது – விமானப்படை தலைமைத் தளபதி

  • நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதே மத்திய அரசின் இலக்கு – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

  • இங்கிலாந்து, பிரான்சில் அதிவேகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது – நிதி அயோக் கொரோனா தடுப்புக்குழு உறுப்பினர்

  • பறவைக்காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து கோழி, முட்டை கொண்டு வரத்தடை


உலகம் :



  • உலகம் முழுவதும் 89 நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியது

  • உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இரு மடங்காக உயர்வு – உலக சுகாதார அமைப்பு

  • 2024ம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று தாக்கம் நீடிக்கும் – பைசர் தடுப்பூசி நிறுவனம் ஆய்வில் தகவல்

  • கொரோனா பெருந்தொற்று காரணமாக நெதர்லாந்து நாட்டில் அமலுக்கு வந்தது ஊரடங்கு

  • ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 66 பேர்கள் உள்ளனர்


விளையாட்டு :



  • அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

  • ஆஷஸ் தொடரில் இரண்டாவது டெஸ்டில் 282 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது

  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை எப்.சி. அணி வெற்றி

  • இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண