Headlines Today : அதிமுக ஒற்றைத்தலைமை மோதல்..! பற்றி எரியும் அக்னிபத் போராட்டம்..! முக்கியச் செய்திகள் சில!

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு :

Continues below advertisement

  • அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் : தீவிரமாக ஆதரவு திரட்டும் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி
  • அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் இன்று திட்டம்
  • ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவந்தால் செல்லாது – துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
  • தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு
  • அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு 20-ந் தேதி சென்னை உரிமையியயல் நீதிமன்றத்தில் விசாரணை
  • புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த இதுவே சரியான தருணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
  • 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
  • சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடக்கம்

இந்தியா :

  • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலுவடையும் போராட்டங்கள்
  • செகந்திரபாத் ரயில்நிலையத்தில் மூன்று ரயில்களுக்கு தீ வைப்பு – ஒருவர் உயிரிழப்பு
  • அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடியதால் உத்தரபிரதேசத்தில் பலியா மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு
  • அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் பீகாரில் 12 மாவட்டங்களுக்கு இணையதள சேவை தடை
  • அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் 334 ரயில்களின் சேவை ரத்து
  • கேரளாவில் இருந்து பீகார் புறப்பட்ட ஈரோட்டிலே நிறுத்தப்பட்டதால் 2 ஆயிரம் பயணிகள் பரிதவிப்பு
  • பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவது நாட்டு நலனை பாதிக்கும் – குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
  • அக்னிபத் திட்டம் இன்னும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் – ராணுவம், விமானப்படை அறிவிப்பு
  • தெற்காசியாவில் சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் அறிவிப்பு

உலகம் :

  • பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் நீடிக்கும் – சர்வதேச நிதி கண்காணிப்பு நடவடிக்கை குழு
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அந்த நாட்டு மக்கள் ஆபத்தான முறையில் பயணம்
  •  

விளையாட்டு :

  • ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி – 82 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற புதிய உலகசாதனையை படைத்தது இங்கிலாந்து
  • இந்தோனிஷியா ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் இந்தியாவின் பிரணாய் முன்னேற்றம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement